மாநில செய்திகள்

இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல்கலாம் விருதை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார் + "||" + ISRO leader Shiva Abdulkalam Award Presented by Chief Minister Palanisamy

இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல்கலாம் விருதை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்

இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல்கலாம் விருதை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து, டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் விருதினை பெற்றார் இஸ்ரோ தலைவர் சிவன்.
சென்னை,

அறிவியல் தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு சுதந்திர தினத்தன்று கடந்த 3 ஆண்டுகளாக அப்துல்கலாம் விருது தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தன்று,  சிவனால் வரமுடியாத சூழ்நிலையில் தற்போது தலைமை செயலகத்தில் நேரடியாக வந்து முதலமைச்சரிடம் இருந்து விருதை பெற்று கொண்டார்.

1999 ஆம் ஆண்டு விக்ரம் சாராபாய் விருது, 2007 ஆம் ஆண்டு இஸ்ரோ விருது, 2012 ஆம் ஆண்டில் டாக்டர் பிரயன் ராய் விருது ஆகியவற்றை சிவன் பெற்றுள்ளார்.