சந்திரயான்-2 நிலவில் தரையிறங்கும் நிகழ்வு அடுத்த மாதம் 7-ஆம் தேதி அதிகாலை தொடங்கும்; பிரதமருக்கு அழைப்பு - இஸ்ரோ சிவன்


சந்திரயான்-2 நிலவில் தரையிறங்கும் நிகழ்வு அடுத்த மாதம் 7-ஆம் தேதி அதிகாலை தொடங்கும்; பிரதமருக்கு அழைப்பு - இஸ்ரோ சிவன்
x
தினத்தந்தி 22 Aug 2019 7:37 AM GMT (Updated: 22 Aug 2019 7:37 AM GMT)

சந்திரயான்-2 நிலவில் தரையிறங்கும் நிகழ்வு அடுத்த மாதம் 7-ஆம் தேதி அதிகாலை தொடங்கும் எனவும் பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரோ சிவன் கூறி உள்ளார்.

சென்னை,

சென்னை விமான நிலையத்தில் இஸ்ரோ சிவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சந்திரயான்-2 நிலவை சுற்றி நீள் வட்டப்பாதையில் சென்றுகொண்டிருக்கிறது.  இனிவரும் நாட்களில் நீள்வட்டப் பாதையை சுருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

உலக அளவில் அனைவராலும் உற்றுநோக்கப்படும் சந்திரயான்-2ஐ நிலவில் தரையிறக்கும் நடவடிக்கை அடுத்த மாதம் 7-ஆம் தேதி அதிகாலை 1.40 மணிக்கு தொடங்கி 1.55 மணிக்கு முடிவடையும்.

தரை இறங்கும் முன் அதன் வேகத்தை குறைத்து பூஜ்ஜியமாக மாற்ற வேண்டும். அது சவாலான பணியாக இருக்கும்.

இனிவரும் நாட்களில் சந்திரயான்-3 உட்பட பல்வேறு திட்டங்களை இஸ்ரோ செயல்படுத்த உள்ளது.

இஸ்ரோவை பொருத்தவரை ஆண், பெண் என பார்த்து வேலை கொடுப்பதில்லை, திறமையானவர்களுக்கே வாய்ப்பு வழங்கப்படுகிறது என கூறினார்.

அடுத்த மாதம் 7-ஆம் தேதி இஸ்ரோவுக்கு பிரதமர் நேரடியாக வர வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு, பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  அது குறித்து பிரதமர் தான் முடிவெடுக்க வேண்டும் என கூறினார்.

Next Story