மாநில செய்திகள்

ப.சிதம்பரம் கைதை கண்டிக்கும் போராட்டம்: முக்கிய தலைவர்கள் எங்கே? தொண்டர்கள் அதிர்ச்சி + "||" + The protest against the arrest of P. Chidambaram Where are the key leaders? The volunteers were shocked

ப.சிதம்பரம் கைதை கண்டிக்கும் போராட்டம்: முக்கிய தலைவர்கள் எங்கே? தொண்டர்கள் அதிர்ச்சி

ப.சிதம்பரம் கைதை கண்டிக்கும் போராட்டம்: முக்கிய தலைவர்கள் எங்கே? தொண்டர்கள் அதிர்ச்சி
ப.சிதம்பரம் கைதை கண்டிக்கும் போராட்டத்தில் காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் பலர் பங்கேற்காததால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சென்னை,

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று கைது செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் இளைஞர் அணி சார்பில் சென்னை அண்ணாசாலை தாராபூர் டவர் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை அடையாறு பகுதியில் கராத்தே தியாகராஜன் தலைமையில் காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த தொண்டர்கள் பேரணியாக செல்ல முயன்றபோது போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது, அதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.  

காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் இருந்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கிருஷ்ணசாமி, குமரி அனந்தன் மற்றும் கோபண்ணா உள்ளிட்டோர் ஊர்வலமாக செல்ல முயன்றனர். இதற்கு போலீசார் அனுமதி மறுத்ததால் இருதரப்புக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இந்த ஆர்ப்பாட்டங்களில் பல்வேறு காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்கவில்லை என  விமர்சனம் எழுந்து உள்ளது. ப.சிதம்பரம் கைதை கண்டிக்கும் போராட்டத்தில் காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் பலர் பங்கேற்காததால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

காங்கிரஸ் தலைவர்கள் கே. ஆர்.ராமசாமி,  பீட்டர் அல்போனஸ், விஜயதாரிணி, ஈவிகேஎஸ் இளங்கோவன், தங்கபாலு, சுதர்சன நாச்சியப்பன்  உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்கவில்லை. 

தொடர்புடைய செய்திகள்

1. திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்துடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சந்திப்பு
திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இன்று சந்தித்து பேசினர்.
2. ப.சிதம்பரத்துக்கு சிறை அதிகாரிகள், பிறந்தநாள் வாழ்த்து
ப.சிதம்பரத்துக்கு சிறை அதிகாரிகள், பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
3. ப.சிதம்பரத்துக்கு ஏற்பட்ட கதிதான் மம்தா பானர்ஜிக்கும் நேரிடும் - உத்தரபிரதேச எம்.எல்.ஏ. எச்சரிக்கை
ப.சிதம்பரத்துக்கு ஏற்பட்ட கதிதான் மம்தா பானர்ஜிக்கும் நேரிடும் என்று உத்தரபிரதேச எம்.எல்.ஏ. எச்சரிக்கை விடுத்துள்ளார்.
4. 74-வது பிறந்த நாளை சிறையில் கழிக்கும் ப.சிதம்பரம்
ஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு இன்று 74-வது பிறந்த தினமாகும்.
5. ப.சிதம்பரம் கைதை கண்டித்து உண்ணாவிரதம் குமரிஅனந்தன், கே.வி.தங்கபாலு பங்கேற்பு
முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து அகில இந்திய அன்னை சோனியா காந்தி மகளிர் நற்பணி பேரவை சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.