மாநில செய்திகள்

அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து + "||" + Chief Minister Edappadi Palanisamy congratulates Baskaran

அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள சர்வதேச ஆணழகனான தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,

ஆணழகன் போட்டிகளில் இந்தியாவின் சார்பாக கலந்து கொண்டு இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்த பாஸ்கரனுக்கு மத்திய அரசின் ‘‘அர்ஜுனா விருது’’அறிவிக்கப்பட்டுள்ளது. 

அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனை பாராட்டி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுப்பி உள்ள வாழ்த்து கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

2018-ம் ஆண்டு தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற 10-வது உலக ஆணழகன் போட்டியில் தங்கப்பதக்கமும், இந்தியாவில் நடைபெற்ற 52-வது ஆசிய ஆணழகன் போட்டியில் தங்கப்பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளீர்கள். தங்களின் சாதனைகளை மேலும் ஊக்குவிக்கும் வண்ணம், இந்திய அரசு தங்களுக்கு ‘‘அர்ஜுனா விருது’’அறிவித்து கவுரவித்துள்ளது என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.

ஆணழகன் போட்டிகளில் இந்தியாவின் சார்பாக கலந்து கொண்டு, தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த தங்களுக்கு என் சார்பாகவும், தமிழ்நாட்டு மக்கள் சார்பாகவும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தாங்கள் இதுபோன்று பல்வேறு சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு, பல சாதனைகள் புரிந்து, இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்திட வேண்டும். பல்வேறு விருதுகளைப் பெற வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...