பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் இல்லை


பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் இல்லை
x
தினத்தந்தி 23 Aug 2019 1:59 AM GMT (Updated: 23 Aug 2019 1:59 AM GMT)

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனையாகிறது.

சென்னை, 

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணையித்துக்கொள்கின்றன. தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையிக்கும் முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.  

இதன்படி,  இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் ரூ.74.62 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் ரூ.68.79 காசுகளாகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

Next Story