மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் வருவாய் உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு + "||" + All over Tamil Nadu Revenue Assistant To fill the vacancy Government order

தமிழகம் முழுவதும் வருவாய் உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு

தமிழகம் முழுவதும் வருவாய் உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு
தமிழகத்தின் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சென்னை,

தமிழகத்தில் நிலவக்கூடிய வருவாய் உதவியாளர் உத்தேச காலிப் பணியிடங்கள் குறித்த தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. நேரடி நியமனம் மூலம் நியமிக்கக்கூடிய இடங்களில் 91 காலிப் பணியிடங்கள் உள்ளன. இதற்கான ஆட்கள் தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திடம் கோரப்பட்டுள்ளது.


இந்த வகையிலான காலிப் பணியிடங்கள் அதிகபட்சம் சென்னை மாவட்டத்தில் 31 இடங்களும், திருவண்ணாமலை, வேலூரில் முறையே 18, 25 இடங்களும் உள்ளன.

இந்த ஆண்டில் பதவி உயர்வின் மூலம் நிரப்பக்கூடிய 1,384 வருவாய் உதவியாளர் காலிப் பணியிடங்கள் இருப்பதாக உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களை நிரப்ப மாவட்ட கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகபட்சமாக காஞ்சீபுரம் மாவட்டத்தில் 167 இடங்களும், அதற்கு அடுத்தபடியாக சென்னையில் 109 இடங்களும் உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகம் முழுவதும் 71 லட்சம் மரக்கன்று நடும் திட்டத்திற்கு ரூ.198 கோடி நிதி அரசாணை வெளியீடு
தமிழகம் முழுவதும் 71 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்திற்கு ரூ.198 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
2. தமிழகம் முழுவதும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் 12 பேர் மாற்றம்
தமிழ்நாட்டில் 12 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதுதொடர்பான அறிவிப்பை அரசு நேற்று அறிவித்தது.
3. தமிழகம் முழுவதும் 1½ லட்சம் விநாயகர் சிலைகள் பிரதி‌‌ஷ்டை இந்து முன்னணி மாநில செயலாளர் பேட்டி
தமிழகம் முழுவதும் 1½ லட்சம் விநாயகர் சிலைகள் பிரதி‌‌ஷ்டை செய்யப்பட உள்ளது என்று இந்து முன்னணி மாநில செயலாளர் கிஷோர் குமார் ஊட்டியில் பேட்டி அளித்தார்.
4. தமிழகம் முழுவதும் 18-ந்தேதி புறநோயாளிகள் புறக்கணிப்பு போராட்டம் அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு
தமிழகம் முழுவதும் புறநோயாளிகள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்து உள்ளது.
5. தமிழகம் முழுவதும் 119 மையங்களில் நடந்தது முதுகலை கணினி ஆசிரியர் தேர்வு 814 இடங்களுக்கு 30 ஆயிரத்து 833 பேர் போட்டி
முதுகலை கணினி ஆசிரியர் தேர்வு தமிழகம் முழுவதும் 119 மையங்களில் நேற்று நடந்தது. 814 இடங்களுக்கு 30 ஆயிரத்து 833 பேர் போட்டியிடுகிறார்கள்.