மாநில செய்திகள்

அருண் ஜெட்லியின் மறைவு நாட்டிற்கு மாபெரும் இழப்பு; துணை முதல் அமைச்சர் பன்னீர்செல்வம் + "||" + Death of Arun Jaitley is a great loss to the country; Deputy CM Panneerselvam

அருண் ஜெட்லியின் மறைவு நாட்டிற்கு மாபெரும் இழப்பு; துணை முதல் அமைச்சர் பன்னீர்செல்வம்

அருண் ஜெட்லியின் மறைவு நாட்டிற்கு மாபெரும் இழப்பு; துணை முதல் அமைச்சர் பன்னீர்செல்வம்
அருண் ஜெட்லியின் மறைவு நாட்டிற்கு மாபெரும் இழப்பு என துணை முதல் அமைச்சர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
புதுடெல்லி,

முன்னாள் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 9ந்தேதி அனுமதிக்கப்பட்டார்.  இந்த நிலையில் அவர் நேற்று உயிரிழந்தார். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தமிழக துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று காலை விமானம் மூலம் டெல்லி சென்றார்.  அவருடன் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் தங்கமணி உள்ளிட்டோரும் சென்றனர்.

அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல் அமைச்சர், அருண் ஜெட்லியின் மறைவு நாட்டிற்கு மாபெரும் இழப்பு.  அவர் நாட்டுக்கும், மக்களுக்கும் சேவையாற்றியவர்.  அவரது குடும்பத்தாருக்கு அ.தி.மு.க. சார்பில் இரங்கலை தெரிவித்து கொள்கிறோம் என கூறினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...