தமிழக பா.ஜனதா சார்பில் டி.வி. விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் பட்டியல் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டார்


தமிழக பா.ஜனதா சார்பில் டி.வி. விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் பட்டியல் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டார்
x
தினத்தந்தி 26 Aug 2019 10:49 PM GMT (Updated: 2019-08-27T09:09:52+05:30)

தமிழக பா.ஜனதா சார்பில் டி.வி. விவாதங்களில் பங்கேற்பவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

சென்னை, 

தமிழக பா.ஜனதா சார்பில் டி.வி. விவாதங்களில் பங்கேற்பவர்களின் பேச்சாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, மாநில பொதுச்செயலாளர் கே.எஸ்.நரேந்திரன் ஒருங்கிணைப்பாளராக இருந்து செயல்படுவார்.

மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், பி.டி.அரசகுமார், கே.டி.ராகவன், சீனிவாசன், புரட்சிகவி தாசன், நாகராஜன், அனுசந்திரமவுலி, சேகர், கனகசபாபதி, ராஜலட்சுமி உள்பட 27 பேர் விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம். இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களின் கருத்துகள் மட்டுமே அதிகாரப்பூர்வ கருத்துகளாக ஏற்றுக்கொள்ளப்படும்.

இந்த தகவல் தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Next Story