ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை


ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 27 Aug 2019 12:33 PM IST (Updated: 27 Aug 2019 1:04 PM IST)
t-max-icont-min-icon

ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

சென்னை,

தகுதிக்கேற்ற ஊதியம், பட்டமேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்டவை வழங்க வலியுறுத்தி தமிழகத்தில் அரசு மருத்துவர்களில் ஒரு பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மருத்துவக் கல்லூரியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் ஏராளமான மருத்துவர்கள் பங்கேற்றுள்ளனர். இதனால் நோயாளிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மருத்துவ கல்வி இயக்குநர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். தலைமைச்செயலகத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 

Next Story