முதலமைச்சரின் வெளிநாடு பயணத்தை விமர்சிக்க திமுகவிற்கு தகுதி இல்லை-அமைச்சர் ஜெயக்குமார்

முதலமைச்சரின் வெளிநாடு பயணத்தை விமர்சிக்க திமுகவிற்கு தகுதி இல்லை, முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் வெளிநாடு பயணம் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சென்னை
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள ராபின்சன் விளையாட்டு மைதானத்தில் நடந்த குறைதீர் முகாமில் பங்கேற்றபின், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
முதலமைச்சரும், துணைமுதலமைச்சரும் இணக்கமாக செயல்படுகின்றனர். வெளிநாடு செல்வதற்கு முன்பு துணை முதலமைச்சரின் இல்லத்திற்கு சென்று முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து பெற்றார். அதிமுகவில் பிளவை ஏற்படுத்தி குளிர்காய நினைப்பவர்களின் முயற்சி, விழலுக்கு இறைத்த நீரைப்போன்றது.
ஸ்டாலின் முதிர்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டும். முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் விமர்சனம் குறித்து தான் திருடி பிறரை நம்பாது. முதலமைச்சரின் வெளிநாடு பயணத்தை விமர்சிக்க திமுகவிற்கு தகுதி இல்லை, முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் வெளிநாடு பயணம் என கூறினார்.
Related Tags :
Next Story