வாக்காளர் பட்டியலை வாக்காளர்களே திருத்தம் செய்ய விரைவில் மொபைல் ஆப்- சத்யபிரதா சாகு


வாக்காளர் பட்டியலை வாக்காளர்களே திருத்தம் செய்ய விரைவில்  மொபைல் ஆப்- சத்யபிரதா சாகு
x
தினத்தந்தி 28 Aug 2019 9:15 AM GMT (Updated: 2019-08-28T14:45:16+05:30)

வாக்காளர் பட்டியலை வாக்காளர்களே திருத்தம் செய்ய செல்போன் ஆப் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

சென்னை

தமிழக  தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் 
சத்யபிரதா சாகு  பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அக்டோபர் 15-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். 2020 ஜனவரியில் முழுமையான வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

வாக்காளர் பட்டியலை வாக்காளர்களே திருத்தம் செய்ய செல்போன் ஆப் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். இணையத்தில் ஆதாரத்துடன் வாக்காளரே திருத்தம் செய்யலாம். 

1.9.2019 முதல் 30.9.2019 வரை வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளலாம். வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள சிறப்பு முகாம் நடத்தப்படும் என கூறினார்.

Next Story