ரெயில்வே ஊழியர்களிடையே ஏற்பட்ட பிரச்சினையால் தண்டவாள கொக்கிகள் அகற்றம் போலீஸ் விசாரணை


ரெயில்வே ஊழியர்களிடையே ஏற்பட்ட பிரச்சினையால் தண்டவாள கொக்கிகள் அகற்றம் போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 28 Aug 2019 12:16 PM GMT (Updated: 2019-08-28T17:46:33+05:30)

சேலத்தில் இருந்து விருத்தாசலம் செல்லும் ரயில் பாதையில் தண்டவாளத்தில் இருந்து 40க்கும் மேற்பட்ட கொக்கிகள் திருடப்பட்டது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

சேலம்

சேலம், ஆத்தூர் வழியாக விருத்தாசலம் செல்லும் இந்த பாதையில் பெங்களூரில் இருந்து காரைக்கால் வரை செல்லும் பயணிகள் ரயில், சேலத்தில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், சேலத்திலிருந்து விருத்தாசலம் செல்லும் பயணிகள் ரயில் ஆகியவை இயக்கப்படுகின்றன. இந்நிலையில் இன்று மதியம் பெங்களூரில் இருந்து காரைக்கால் செல்லும் ரயில் ஆத்தூர் ரயில் நிலையத்திற்கு முன்புள்ள காட்டுகொட்டாய் பகுதியில் சென்று கொண்டு இருந்த போது ரயில் தண்டவாளத்தில் கொக்கிகள் இல்லாததை, ரயிலை இயக்கிய ஓட்டுநர் கவனித்துள்ளார்.

பின்னர் ரயிலை நிறுத்தாமல், இதுகுறித்து ஆத்தூர் ரயில் நிலையத்திற்கு அவர் தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து அங்கு சென்ற ரயில்வே போலீசார் மற்றும் ஆத்தூர் போலீசார் ஆய்வு செய்ததில், தண்டவாளத்தில் இருந்து 40 கொக்கிகள் மாயமானது தெரியவந்தது. கொக்கிகள் திருடப்பட்டது குறித்து அந்த பகுதியில் விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் ரெயில்வே ஊழியர்களிடையே ஏற்பட்ட பிரச்சினையால் தண்டவாள கொக்கிகள் அகற்றப்பட்டதாக தெரிகிறது; உரிய விசாரணைக்குப் பிறகே முழு விவரம் தெரியவரும் என ரெயில்வே ஐஜி வனிதா தனியார் தொலைக் காட்சிக்கு விளக்கம்  அளித்து உள்ளார்.

Next Story