ஊட்டி மாசு தடுப்பு நடவடிக்கைகள்; அறிக்கை அளிக்க நீலகிரி ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவு


ஊட்டி மாசு தடுப்பு நடவடிக்கைகள்; அறிக்கை அளிக்க நீலகிரி ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவு
x
தினத்தந்தி 28 Aug 2019 3:00 PM GMT (Updated: 2019-08-28T20:30:45+05:30)

ஊட்டி மாசு தடுப்பு நடவடிக்கைகள் பற்றி அறிக்கை அளிக்க நீலகிரி ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

நீலகிரி,

சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு பிறப்பித்துள்ள உத்தரவில், ஊட்டி ஏரி மாசடைவதை தடுக்க, டீசல் படகுகளுக்கு பதிலாக பேட்டரி படகுகளை இயக்குவது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என தெரிவித்து உள்ளது.

இதேபோன்று ஊட்டி மாசடைவதை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நீலகிரி ஆட்சியர் அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டு உள்ளது.

ஊட்டியில் 283 இடங்களை கட்டுமானங்கள் மேற்கொள்ள தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Next Story