விபத்தில் சிக்கிய கன்றை பிரிய மறுத்த தாய் பசு


விபத்தில் சிக்கிய கன்றை பிரிய மறுத்த தாய் பசு
x
தினத்தந்தி 28 Aug 2019 8:16 PM GMT (Updated: 2019-08-29T01:46:27+05:30)

திருச்சி மன்னார்புரத்தில் இருந்து கே.கே.நகருக்கு நேற்று மதியம் ஒரு ஆட்டோ சென்று கொண்டிருந்தது.

திருச்சி மன்னார்புரத்தில் இருந்து கே.கே.நகருக்கு நேற்று மதியம் ஒரு ஆட்டோ சென்று கொண்டிருந்தது. காஜாமலை காலனி அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த கன்றுக்குட்டி மீது ஆட்டோ மோதி சாலையில் கவிழ்ந்தது. இதில் ஆட்டோ டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. ஆட்டோ மோதியதில் கன்றுக்குட்டி தூக்கி வீசப்பட்டு படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது.

இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் ஓடி வந்து ஆட்டோவை தூக்கி நிறுத்தினார்கள். அதற்குள் கன்றுக்குட்டி அடிபட்டு கிடப்பதை பார்த்த தாய் பசு மற்றும் சில பசுக்கள் அங்கு வந்து கன்றுக்குட்டியை நாவால் தடவிக் கொண்டிருந்தது பார்ப்போரின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. பின்னர் தாய் பசுவை விரட்டிவிட்டு, கன்றுக்குட்டிக்கு அங்கிருந்தவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அருகில் இருந்த கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story