தங்க தமிழ்செல்வனுக்கு திமுகவில் கொள்கை பரப்புச் செயலாளர் பதவி : அக்கட்சியின் தரத்தை காட்டுகிறது - ஓ.பன்னீர்செல்வம்


தங்க தமிழ்செல்வனுக்கு திமுகவில் கொள்கை பரப்புச் செயலாளர் பதவி : அக்கட்சியின் தரத்தை காட்டுகிறது - ஓ.பன்னீர்செல்வம்
x
தினத்தந்தி 30 Aug 2019 9:40 AM GMT (Updated: 2019-08-30T16:21:50+05:30)

தங்க தமிழ்செல்வனுக்கு திமுகவில் கொள்கை பரப்புச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டிருப்பது அக்கட்சியின் தரத்தை காட்டுவதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.

சென்னை

தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஜி.கே.மூப்பனாரின் 18-வது நினைவு தினத்தையொட்டி, சென்னை தியாகராய நகரில் உள்ள அவரின் நினைவிடத்தில்  துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மரியாதை செலுத்தினார். 

பின்னர்  பன்னீர்செல்வம் பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

பாஜக அரசில் அனைத்து துறைகளிலும் மறுசீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. வரிச்சுமை இல்லாத நிலையை உருவாக்க மத்திய அரசு முயன்று வருகிறது.  

தங்க தமிழ்செல்வனுக்கு திமுகவில் கொள்கை  பரப்புச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டிருப்பது அக்கட்சியின் தரத்தை காட்டுகிறது. வெளிநாட்டு பயணம் குறித்து முதல்வரே தெளிவான விளக்கம் அளித்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story