நிலவின் தென் துருவத்திற்கு மனிதர்களை அனுப்ப 'நாசா' முடிவு: முன்னாள் விஞ்ஞானி டொனால்ட் ஏ தாமஸ் தகவல்


நிலவின் தென் துருவத்திற்கு மனிதர்களை அனுப்ப நாசா முடிவு: முன்னாள் விஞ்ஞானி டொனால்ட் ஏ தாமஸ் தகவல்
x
தினத்தந்தி 31 Aug 2019 2:15 PM GMT (Updated: 2019-08-31T19:45:09+05:30)

அடுத்த 5 ஆண்டுகளில் நிலவின் தென் துருவத்திற்கு மனிதர்களை அனுப்ப 'நாசா' முடிவு செய்துள்ளதாக 'நாசா' முன்னாள் விஞ்ஞானி டொனால்ட் ஏ தாமஸ் தெரிவித்துள்ளார்.

நாகர்கோவில்,

நிலவின் தென்துருவத்தில் சந்திரயான்-2 மேற்கொள்ளும் ஆராய்ச்சிகள் மிகவும் முக்கியமானது என 'நாசா' முன்னாள் விஞ்ஞானி டொனால்ட் ஏ தாமஸ் தெரிவித்துள்ளார். 

நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த 'நாசா' முன்னாள் விஞ்ஞானி டொனால்ட் ஏ தாமஸ் கூறுகையில்,

உலக நாடுகள் அனைத்தும் விண்வெளியில் ஒரே கூரையின் கீழ் பயணித்து வருகின்றன.  நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-2 தரையிறங்குவதை  'நாசா'  உன்னிப்பாகவும், ஆர்வமாகவும் கவனித்து வருகிறது.  நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-2 மேற்கொள்ளும் ஆராய்ச்சிகள் மிகவும் முக்கியமானது. அடுத்த 5 ஆண்டுகளில் நிலவின் தென் துருவத்திற்கு மனிதர்களை அனுப்ப  'நாசா'  முடிவு செய்துள்ளதாக  அவர் தெரிவித்துள்ளார்.

Next Story