விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் உளம் கனிந்த நல்வாழ்த்துகள்; முதல் அமைச்சர் வாழ்த்து


விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் உளம் கனிந்த நல்வாழ்த்துகள்; முதல் அமைச்சர் வாழ்த்து
x
தினத்தந்தி 1 Sept 2019 10:34 AM IST (Updated: 1 Sept 2019 10:34 AM IST)
t-max-icont-min-icon

விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் உளம் கனிந்த நல்வாழ்த்துகள் என முதல் அமைச்சர் பழனிசாமி வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார்.

சென்னை,

தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாளை கோலாகலமுடன் கொண்டாடப்படுகிறது.  இதனை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது வசதிக்கேற்ப விநாயகர் சிலைகளை கடைகளில் வாங்கி வீடுகளில் வைத்து வணங்குவர்.  பின்பு விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை, சுண்டல் உள்ளிட்ட பண்டங்களை வைத்து வணங்கி வழிபடுவர்.

இதனை முன்னிட்டு முதல் அமைச்சர் பழனிசாமி தமிழக மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் உளம் கனிந்த நல்வாழ்த்துகள்.  விநாயக பெருமானின் அவதார நாளில் வீடெங்கும் அன்பும், மகிழ்ச்சியும் நிறையட்டும், நாடெங்கும் நலமும் வளமும் பெருகட்டும் என தெரிவித்துள்ளார்.

Next Story