உலக தொழில் முனைவோர் மாநாடு; முதலீடுகள் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: ஸ்டாலின் பேட்டி


உலக தொழில் முனைவோர் மாநாடு; முதலீடுகள் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்:  ஸ்டாலின் பேட்டி
x
தினத்தந்தி 1 Sep 2019 7:15 AM GMT (Updated: 1 Sep 2019 7:15 AM GMT)

உலக தொழில் முனைவோர் மாநாட்டில் வந்த முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என ஸ்டாலின் பேட்டியில் கூறினார்.

நெல்லை,

சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட பூலித்தேவனின் 304வது பிறந்த நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.  இதனையொட்டி நெல்லையில் நெற்கட்டும்செவலில் உள்ள அவரது சிலைக்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதன்பின்பு செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர், நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் யார் போட்டி என்பது குறித்து, தேர்தல் தேதி அறிவித்த பின் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என கூறினார்.

பூலித்தேவனின் மணிமண்டபத்தில் உள்ள அவரது வாழ்க்கை குறிப்பேட்டை பார்த்தேன்.  சுதந்திர போராட்டத்தில் இந்தியாவுக்கே பெருமை சேர்த்தவர் அவர் என கூறினார்.

இதேபோன்று வங்கிகள் இணைப்பு பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், வங்கி ஊழியர்கள், அரசின் பொதுத்துறை வங்கி இணைப்பு நடவடிக்கைக்கு எதிராக வெறுப்பு காட்டி வருகின்றனர் என கூறினார்.  முதல் அமைச்சர் மட்டுமல்ல.  10 அமைச்சர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்கின்றனர்.

ஏற்கனவே நடந்த 2 உலக தொழில் முனைவோர் மாநாட்டின் நிலை என்ன? அதன் மூலம் வந்த முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Next Story