சரிந்து கொண்டிருக்கும் இந்திய பொருளாதாரம்: முனைப்பான நடவடிக்கைகளை எடுக்க பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
பொருளாதாரம் தலை நிமிர பிரதமர் மோடி முனைப்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
சரிந்து கொண்டிருக்கும் இந்திய பொருளாதாரம் உலக நாடுகள் மத்தியில் தலை நிமிர, பிரதமர் மோடி பொருளாதார நிபுணர்களை கலந்தாலோசித்து முனைப்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பொருளாதாரம் தலை நிமிர பிரதமர் மோடி முனைப்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மன்மோகன் சிங் கூறியது போல் அரசியல் பழிவாங்கல்களை மூட்டை கட்டிவிட்டு ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும். 2-வது முறையாக வாக்களித்த மக்களின் எதிர்கால வாழ்க்கையை பாதுகாக்க அவசர நடவடிக்கை தேவை.
எத்தகைய சோதனைகளையும் சமாளித்து சிலிர்த்து எழும் வல்லமை இந்திய பொருளாதாரத்திற்கு உண்டு. பொருளாதாரம் பின்னோக்கிச்செல்கிறது என்பதை நிபுணர்கள் எடுத்துரைத்தும் அரசு கவலைப்படுவதாக தெரியவில்லை.
ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டிய பாஜக அரசின் கவனமும் முன்னுரிமைகளும் வேறுவகையாக இருப்பது கவலை அளிக்கிறது. பொருளாதார பின்னடைவுகளை மறைப்பது இமயமலையை இலைச்சோற்றுக்குள் மறைக்கும் முயற்சியாகும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story