மதுரையில் இருந்து சென்னைக்கு ஒரே விமானத்தில் வந்த ஓ.பன்னீர்செல்வம்–மு.க.ஸ்டாலின்
மதுரையில் இருந்து சென்னைக்கு ஒரே விமானத்தில் ஓ.பன்னீர்செல்வம்–மு.க.ஸ்டாலின் வந்தனர்.
சென்னை
நெல்லை மாவட்டம் சிவகிரி தாலுகா வாசுதேவநல்லூர் அருகே நெற்கட்டும்செவலில் நடந்த சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவன் பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டு விட்டு துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இருவரும் மதுரையில் இருந்து சென்னைக்கு ஒரே விமானத்தில் வந்தனர்.
சென்னை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அ.தி.மு.க.வினரும், மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க.வினரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் இருவரும் தனித்தனியாக காரில் ஏறிச்சென்று விட்டனர்.
Related Tags :
Next Story