சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி வி.கே.தஹில்ரமானி மாற்றம்


சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி வி.கே.தஹில்ரமானி மாற்றம்
x
தினத்தந்தி 2 Sept 2019 12:50 AM IST (Updated: 2 Sept 2019 12:50 AM IST)
t-max-icont-min-icon

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வருபவர் வி.கே.தஹில்ரமானி.

சென்னை, 

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வருபவர் வி.கே.தஹில்ரமானி. மும்பை ஐகோர்ட்டில் மூத்த நீதிபதியாக பணியாற்றி வந்த அவர், கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

மத்திய தீர்ப்பாய வழக்குகள், கிரிமினல் வழக்குகளில் நிபுணத்துவம் பெற்ற இவர், சென்னை ஐகோர்ட்டில் பல்வேறு நிர்வாக சீர்திருத்தங்களை செய்துள்ளார்.

தற்போது இவரை மேகாலயா ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக மாற்றம் செய்ய சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அடங்கிய 3 நீதிபதிகள் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.

இதைத்தொடர்ந்து வி.கே.தஹில்ரமானியை மத்திய அரசு மேகாலயா தலைமை நீதிபதியாக நியமித்துள்ளது.

அதேபோன்று, சென்னை ஐகோர்ட்டின் மூத்த நீதிபதி எஸ்.மணிக்குமார், கேரள ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2006-ம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்ட இவர், கடந்த 13 ஆண்டுகளாக இங்கு பணியாற்றி வருகிறார்.

இவர்கள் இருவரும் விரைவில் பொறுப்பேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story