முதல்-அமைச்சர் வெளிநாட்டு பயணத்தில் எந்த மர்மமும் இல்லை - துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி


முதல்-அமைச்சர் வெளிநாட்டு பயணத்தில் எந்த மர்மமும் இல்லை - துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
x
தினத்தந்தி 3 Sept 2019 3:45 AM IST (Updated: 3 Sept 2019 3:28 AM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சர் வெளிநாட்டு பயணத்தில் எந்த மர்மமும் இல்லை என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

ஆலந்தூர்,

சென்னையில் இருந்து மதுரை புறப்படும் முன்பு மீனம்பாக்கம் விமான நிலையத்தில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜனுக்கு தெலுங்கானா மாநில கவர்னர் பதவி வழங்கப்பட்டு உள்ளது. அவரது உழைப்புக்கு இந்த பதவி கிடைத்து உள்ளது. தமிழிசை சவுந்தரராஜனுக்கு அ.தி.மு.க. சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது பதவி ஏற்பு விழாவில் தமிழக அரசு சார்பில் உறுதியாக கலந்துகொள்வோம்.

தமிழக அமைச்சரவை சுற்றுலா அமைச்சரவை என கூறியுள்ள ஸ்டாலினை பொறுத்தவரை எதிர்மறையான கேள்வியை கேட்டு அதற்கு அவரே பதிலை சொல்லிவிடுவார்.

அ.தி.மு.க.வை பொறுத்தவரை தற்போது உள்ள இயக்கங்களில் மாபெரும் இயக்கமாக, யாராலும் அசைக்க முடியாத எக்கு கோட்டையாக இருக்கிறது. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளின் இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெறும்.

எந்தவொரு பொதுத்துறை வங்கியும் மூடப்படாது என்று மத்திய அரசு தெரிவித்து உள்ளது. வங்கிகளை இணைத்து தான் உள்ளனர். 2, 3 வங்கிகளை இணைத்து அரசு ஆணை வெளியிடப்பட்டு உள்ளது. எந்தவொரு வங்கியையும் மூடி, மற்றொரு வங்கி தொடங்கவில்லை என்று மத்திய அரசு விளக்கமளித்து உள்ளது. பொதுத்துறையில் பணியாற்றும் ஊழியர்கள், அதிகாரிகள் யாரும் அச்சப்படத் தேவையில்லை.

முதல்-அமைச்சரின் வெளிநாட்டு பயணத்தில் எந்த மர்மமும் இல்லை. இதுபற்றி முதல்-அமைச்சர் ஏற்கனவே விளக்கமாக கூறியுள்ளார். அவர் சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு வந்தபின்னர் இதற்கான விடை தெரியும். முக்கிய முடிவுகளை எடுக்க அதிகாரம் வழங்குவது என்பது முதல்-அமைச்சரின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு உட்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story