அமமுக புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்


அமமுக புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்
x
தினத்தந்தி 3 Sept 2019 1:00 PM IST (Updated: 3 Sept 2019 1:00 PM IST)
t-max-icont-min-icon

அமமுக புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பரணி கார்த்திகேயன், சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

சென்னை,

அம்மா மக்கள் முன்னேற்ற கழக  புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பரணி கார்த்திகேயன், சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இன்று இணைந்தார். கார்த்திகேயன் அறந்தாங்கி அதிமுக எம்எல்ஏ ரத்தினசபாபதியின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.

பரணி கார்த்திகேயன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அமமுகவிலிருந்து இன்னும் ஒரு வாரத்திற்குள் நிர்வாகிகள் திமுகவில் இணைய உள்ளனர். புதுக்கோட்டையில் மிகப்பெரிய மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளேன், அப்போது அமமுகவில் என்ன பிரச்சினை என்பதை தெளிவாக கூறுவேன் என கூறினார்.

Next Story