திமுக திமிங்கலம் என்றால் அதனிடம் மாட்டாத விலாங்கு மீன் அதிமுக -அமைச்சர் ஜெயக்குமார்


திமுக திமிங்கலம் என்றால் அதனிடம் மாட்டாத விலாங்கு மீன் அதிமுக -அமைச்சர் ஜெயக்குமார்
x
தினத்தந்தி 3 Sept 2019 5:20 PM IST (Updated: 3 Sept 2019 5:20 PM IST)
t-max-icont-min-icon

திமுக திமிங்கலம் என்றால் அதனிடம் மாட்டாத விலாங்கு மீன் அதிமுக என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

சென்னை,

சென்னை பாரிமுனையில் உள்ள குறளகத்தில் தமிழ்நாடு கதர் மற்றும் கிராம சபை சார்பில் கொலு பொம்மை கண்காட்சி மற்றும் விற்பனையை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-

மாற்றுக் கட்சியினருக்கு திமுகவில் பதவிக் கொடுப்பது குழந்தைகளுக்கு ஏதோ சாக்லெட் கொடுத்து ஏமாற்று போல் உள்ளது. அமமுகவிலிருந்து வேண்டுமானால் சிலர் திமுகவுக்கு செல்லலாம். ஆனால் அதிமுகவிலிருந்து யாரும் திமுகவுக்கு செல்லமாட்டார்கள்.

அதிமுகவை விழுங்க திமுக முயற்சித்து வருகிறது. திமுக திமிங்கலம் என்றால் அதனிடம் மாட்டாத அதிமுக விலாங்கு மீன். திமுக வாயை திறந்து கொண்டு யாராவது மாட்டுவார்களா என பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அது நடக்காது என்று கூறினார்.

Next Story