டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளையொட்டி: 377 பேருக்கு நல்லாசிரியர் விருது


டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளையொட்டி: 377 பேருக்கு நல்லாசிரியர் விருது
x
தினத்தந்தி 4 Sept 2019 4:15 AM IST (Updated: 4 Sept 2019 3:24 AM IST)
t-max-icont-min-icon

டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளையொட்டி 377 பேருக்கு நல்லாசிரியர் விருது சென்னையில் நாளை வழங்கப்படுகிறது.

சென்னை,

தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறை சார்பில் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளையொட்டி நாளை (வியாழக்கிழமை) நல்லாசிரியர் விருது வழங்கப்பட்ட உள்ளது. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெறும் இந்த விழாவில் பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் வரவேற்புரையாற்றுகிறார்.

முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் தலைமை தாங்குகிறார். தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் பா.வளர்மதி முன்னிலை வகிக்கிறார். மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் சிறப்புரையாற்றுகிறார். பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை ஆசிரியர்களுக்கு வழங்க இருக்கிறார்.

165 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள், 165 உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், மாவட்டத்துக்கு ஒன்று வீதம் 32 மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், 2 ஆங்கிலோ இந்தியன் பள்ளி ஆசிரியர்கள், 3 மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தை சேர்ந்த 10 ஆசிரியர்கள் என மொத்தம் 377 ஆசிரியர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளது.

Next Story