வரலாறு காணாத உச்சம்! ஒரு சவரன் தங்கம் 30 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனை
வரலாற்றின் புதிய உச்சத்தில் தங்கம் விலை சென்றுள்ளது. சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.288 உயர்ந்து ரூ.30,120-க்கு விற்பனையாகிறது.
சென்னை,
ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூபாய் 30 ஆயிரத்தை கடந்து வரலாற்றில் புதிய உச்சத்தை எட்டியது. தற்போதைய நிலவரப்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூபாய் 30,120 ஆக இருக்கிறது. சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 288 உயர்ந்து ரூபாய் 30,120க்கு விற்பனையாகிறது.
கடந்த 40 நாட்களில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 3,640 அதிகரித்துள்ளது. அதேபோல் வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூபாய் 2.60 அதிகரித்து ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூபாய் 55.20 விற்பனை செய்ய்யப்படுகிறது.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, உலகளவில் நிலவும் பொருளாதார மந்தநிலை காரணமாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தங்க நகைக்கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
Related Tags :
Next Story