தமிழக அமைச்சரவை சுற்றுலா அமைச்சரவையாக மாறிவிட்டது - மு.க.ஸ்டாலின்


தமிழக அமைச்சரவை சுற்றுலா அமைச்சரவையாக மாறிவிட்டது - மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 4 Sep 2019 7:00 AM GMT (Updated: 4 Sep 2019 7:00 AM GMT)

தமிழக அமைச்சரவை சுற்றுலா அமைச்சரவையாக மாறிவிட்டது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.

சென்னை,

அண்ணா அறிவாலய மேலாளர் பத்மநாபனின் மகன் திருமண விழா இன்று காலை கலைஞர் அரங்கில் நடைபெற்றது. திருமண விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும்போது  கூறியதாவது:-

பொருளாதார வீழ்ச்சியை மூடி மறைக்கவே ப.சிதம்பரம் கைது மற்றும் காஷ்மீர் விவகாரத்தை மத்திய அரசு எடுத்துள்ளது. இந்தியாவை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகி வருகிறது. 27 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு பொருளாதர வீழ்ச்சியை இந்தியா சந்தித்து வருகிறது.

நடந்து முடிந்த 2 முதலீட்டாளர் மாநாடு தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிட கேட்டேன், இதுவரை வெளியிடவில்லை. இந்த சூழலில் தான் முதல்வர், அமைச்சர்கள் வெளிநாடு சென்றிருக்கிறார்கள். தமிழக அமைச்சரவை சுற்றுலா அமைச்சரவையாக மாறி விட்டது என கூறினார்.

Next Story