தமிழக முதல்–அமைச்சர்களின் வெளிநாட்டு பயணங்கள் எப்படி? தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டது இதுவே முதல் முறை
தமிழக முதல்–அமைச்சர்களின் வெளிநாட்டு பயணங்களில், தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
சென்னை,
தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு முறைப் பயணமாக லண்டன், அமெரிக்கா, அமீரகம் ஆகிய நாடுகளுக்கு கடந்த மாதம் (ஆகஸ்டு) 28–ந் தேதி புறப்பட்டு சென்றார். தமிழக முதல்–அமைச்சர் ஒருவரின் வெளிநாடு பயணம் என்பது இப்போதைய இளம் தலைமுறையினர் மத்தியில் புதிதாக பார்க்கப்படுகிறது.
ஏன்.. இதற்கு முன்பு தமிழ்நாட்டை ஆண்ட முதல்–அமைச்சர்கள் வெளிநாடுகளுக்கே சென்றதில்லையா? என்ற கேள்வியும் எழத் தொடங்கியிருக்கிறது. ஏற்கனவே, அண்ணா, எம்.ஜி.ஆர்., கருணாநிதி ஆகியோர் முதல்–அமைச்சர் பொறுப்பில் இருந்தபோது வெளிநாடு பயணம் மேற்கொண்டிருக்கிறார்கள். ஆனால், காமராஜர் தமிழகத்தின் முதல்–அமைச்சராக இருந்தபோது வெளிநாடு பயணம் மேற்கொள்ளவில்லை. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் அவர் இருந்த காலத்தில் வெளிநாடு சென்றிருக்கிறார்.
அதாவது, 1966–ம் ஆண்டு ஜூலை 22–ந் தேதி, காங்கிரஸ் தலைவராக காமராஜர் இருந்தபோது ரஷ்யா, செக்கோஸ்லேவியா, யூகோஸ்லேவியா, பல்கேரியா, கிழக்கு ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். ரஷியாவில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் பண்ணைகளை பார்க்க சென்ற அவர், சாதாரண உடையிலேயே சென்றிருந்தார்.
காமராஜரின் வழக்கமான உடை என்னவென்றால், முழங்கையை மறைக்கும் அளவுக்கு கதர் சட்டை, 4 முழ கதர் வேட்டி அவ்வளவு தான். காலில் சாதாரண செருப்பு அணிந்திருப்பார். அவர் வெளிநாட்டுக்கு பயணம் செல்லும் முன்பு, அவருக்கு நெருக்கமாக இருந்தவர்கள், ரஷியாவில் அதிக குளிர் இருப்பதாகவும், ஸ்வெட்டர் அணிந்து செல்லு மாறும் கூறினார்கள். ஆனால், எளிமைக்கு இலக்கணமான காமராஜரோ, ‘‘கதர் ஆடையிலேயே செல்வேன். அதிகம் குளிர்ந்தால் சால்வையால் மூடிக்கொள்வேன்’’ என்று கூறிவிட்டு, அருகில் உள்ள ஊருக்கு செல்வதுபோல், வெளிநாடு சென்றார்.
தி.மு.க. தலைவராக இருந்தபோதே, அண்ணா 1965–ம் ஆண்டு ஜூலை 16–ந் தேதி 4 நாடுகளுக்கு 3 வார பயணமாக சென்று வந்திருக்கிறார். மலேசியா, சிங்கப்பூரில் நடைபெற்ற சிறப்பு சொற்பொழிவுகளில் பங்கேற்ற அவர், தொடர்ந்து ஜப்பான், ஹாங்காங், மணிலா, கம்போடியா சென்று அங்குள்ள தொழில் வளர்ச்சியை பார்வையிட்டார்.
தமிழக முதல்–அமைச்சராக அண்ணா பொறுப்பேற்ற பிறகு, 1968–ம் ஆண்டு அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டார். அங்குள்ள பல மாகாணங்களுக்கு சென்ற அவர், பொக்லைன் எந்திர தொழிற்சாலையை தமிழகத்திற்கு கொண்டுவருவது குறித்து பேசினார். பின்னர், ஜப்பான் சென்று பல தொழில் நிறுவனங்களை பார்வையிட்டார்.
அதேபோல், எம்.ஜி.ஆர். முதன்முதலில் 1972–ம் ஆண்டு மே மாதம் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். அதே ஆண்டு ஜூலை மாதம் சினிமா படப்பிடிப்புக்காக ஆஸ்திரேலியா சென்றார். அங்கிருந்து திரும்பும்போது சிங்கப்பூரில் நடைபெற்ற கலாசார கலை விழாவில் பங்கேற்றார். அதன்பிறகு, அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எம்.ஜி.ஆர். இருந்தபோது 1974–ம் ஆண்டு மோரீஸ் நாட்டில் நடைபெற்ற குடியரசு விழாவில் பங்கேற்க சென்றார். அங்கிருந்து திரும்பும் வழியில் கென்யா நாட்டுக்கு பயணமானார்.
அதே ஆண்டு அமெரிக்கா வாஷிங்டன் நகரத்தில் உள்ள விஸ்கான் பல்கலைக்கழகத்தில் பேசச் சென்றார். 1975–ம் ஆண்டு ரஷியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு அவர் சென்று வந்தார். ஆனால், 1977–ம் ஆண்டு முதல்–அமைச்சராக எம்.ஜி.ஆர். பொறுப்பேற்ற பிறகு, மீண்டும் இங்கிலாந்து சென்றார். அங்கிருந்து அமெரிக்கா அரசு அழைப்பின் பேரில் அங்கும் சென்றார். அங்குள்ள மெக்சிகோ நகரில் தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்திற்கு கரும்பு சக்கையில் இருந்து காகிதம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை வாங்கி வந்தார்.
அதன்பிறகு, 1985–ம் ஆண்டு சிறுநீரக சிகிச்சைக்காக எம்.ஜி.ஆர். அமெரிக்கா சென்றார். அப்போது அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பிறகு, மருத்துவ பரிசோதனைக்காக டாக்டர் கானுவை சந்திக்க ஜப்பான் சென்றபோது, தமிழக அரசுக்கு 2 கப்பல்கள் வாங்கப்பட்டன. அங்கிருந்து, மருத்துவ பரிசோதனைக்காக மீண்டும் அவர் அமெரிக்கா சென்றார். தொடர்ந்து, 1987–ம் ஆண்டும் எம்.ஜி.ஆர். மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றார்.
கருணாநிதி முதல்–அமைச்சராக இருந்தபோது, 5 முறை அரசு ரீதியாக வெளிநாடு பயணம் மேற்கொண்டிருக்கிறார். 1970–ம் ஆண்டு இங்கிலாந்து, பிரான்ஸ், மேற்கு ஜெர்மனி, இத்தாலி ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்கும், பாரீசில் நடைபெற்ற 3–வது உலகத் தமிழ் மாநாட்டின் தொடக்க விழாவுக்கும் சென்று வந்த கருணாநிதி, அதன் பிறகு, 1971–ம் ஆண்டு அமெரிக்கா, 1987–ம் ஆண்டு மலேசியா ஆகிய நாடுகளுக்கு சென்று வந்தார்.
அதே ஆண்டு மலேசியா நாட்டின் கோலாலம்பூரில் நடைபெற்ற 6–வது உலகத் தமிழ் மாநாட்டின் தொடக்க விழாவிலும் பங்கேற்ற கருணாநிதி, 1999–ம் ஆண்டு சிங்கப்பூர் மற்றும் மலேசியாவுக்கு சென்று வந்தார்.
தமிழகத்தின் முதல்–அமைச்சராக அதிக முறை (6 முறை) இருந்த ஜெயலலிதா, தனது பதவி காலத்தில் ஒருமுறைகூட வெளிநாடு சென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அண்ணா, எம்.ஜி.ஆர்., கருணாநிதி ஆகியோர் முதல்–அமைச்சராக இருந்த காலத்தில் வெளிநாடு சென்றபோது, அவர்களது பணிகள் பிற அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டு பயணத்தின்போது, அவரது பணிகள் எதுவும் பிற அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை.
ஆனால், முந்தைய முதல்–அமைச்சர்கள் வெளிநாடு பயணத்தின்போது தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக வரலாறு இல்லை. ஆனால், தற்போது நடைபெற்ற தொழில் முதலீட்டாளர் கூட்டங்களில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் ரூ.5,080 கோடி அளவுக்கு தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன என்பது புதிய சாதனை ஆகும்.

Related Tags :
Next Story