ஆவின் பால் விலை உயர்வுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி


ஆவின் பால் விலை உயர்வுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு  தள்ளுபடி
x
தினத்தந்தி 6 Sep 2019 6:56 AM GMT (Updated: 6 Sep 2019 6:56 AM GMT)

ஆவின் பால் விலை உயர்வுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

சென்னை,

தமிழகத்தில் ஆவின் பால் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்டது. பால் கொள்முதல் விலை உயர்த்தப்படுவதால், விற்பனை விலையும் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இந்த விலை உயர்வுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில், ஆவின் பால் விலை உயர்வை எதிர்த்து முனிகிருஷ்ணன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் மனுவை பரிசீலனை செய்த நீதிபதி, உரிய ஆதாரம் இன்றி வழக்கு தொடரப்பட்டிருப்பதாக கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

மேலும், ஆவின் பால் விலை உயர்வுக்கு எதிராக ஆதாரம் இன்றி வழக்கு தொடர்ந்தது ஏன்? விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நீங்கள், டாஸ்மாக் கடைகளுக்கு மது குடிக்க செல்வோரைத் தடுக்க என்ன செய்தீர்கள்? என மனுதாரருக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார்.

Next Story