அயராது பாடுபட்ட விஞ்ஞானிகளின் உழைப்பு பாராட்டுக்குரியது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி


அயராது பாடுபட்ட விஞ்ஞானிகளின் உழைப்பு பாராட்டுக்குரியது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 7 Sep 2019 2:46 PM GMT (Updated: 7 Sep 2019 2:46 PM GMT)

சந்திரயான்-2 விண்கலத்தை ஏவும் திட்டத்திற்கு அயராது பாடுபட்ட விஞ்ஞானிகளின் உழைப்பு பாராட்டுக்குரியது என்று முதல் அமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை,

இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானிகளுக்கு, தலைவர்கள், பொதுமக்கள்  பிரபலங்கள் அன அனைத்து தரப்பினரும்  சமூக ஊடகங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.  அந்த வகையில் தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், “ சந்திரயான் -2 விண்கலத்தை ஏவும் திட்டத்திற்காக அல்லும், பகலும் அயராது உழைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளின் முயற்சி, உழைப்பு மிகவும் பாராட்டத்தக்கது.  

இஸ்ரோ விஞ்ஞானிகள் இந்த திட்டத்தில் மட்டுமல்லாமல், மேலும் பல திட்டங்களில் கண்டிப்பாக வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.  இஸ்ரோ விஞ்ஞானிகள் புது நம்பிக்கையுடனும், ஊக்கத்துடனும் செயல்பட்டு பல வெற்றிகள் பெற தமிழக மக்கள் சார்பாக வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

Next Story