மதுரையில் பரபரப்பு : தற்காப்புக்காக காவல் உதவி ஆய்வாளர் துப்பாக்கிச் சூடு..


மதுரையில் பரபரப்பு : தற்காப்புக்காக காவல் உதவி ஆய்வாளர் துப்பாக்கிச் சூடு..
x
தினத்தந்தி 8 Sept 2019 8:50 AM IST (Updated: 8 Sept 2019 1:48 PM IST)
t-max-icont-min-icon

மதுரையில் தற்காப்புக்காக காவல் உதவி ஆய்வாளர் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரை,

மதுரையில் காவல் உதவி ஆய்வாளர் ரவுடிகளிடமிருந்து தன்னை தற்காத்துக் கொள்வதற்காக வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரை காமராஜர் சாலையோரமாக ரவுடிகள் சிலர் மது அருந்திக்கொண்டு இருந்தனர். அப்போது அந்த பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட காவல் உதவி ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் அவர்களை கண்டித்துள்ளார்.

கண்டித்த காவல் உதவி ஆய்வாளரை ரவுடி கும்பல் தாக்க முற்பட்டது. இதன் காரணமாக, உதவி ஆய்வாளர் தற்காப்புக்காக வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

காவல் உதவி ஆய்வாளரை தாக்க முயற்சித்த குற்றத்திற்காக ரவுடி ராஜகிருஷ்ணன் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.




Next Story