திருச்சி முக்கொம்பு கொள்ளிடத்தில் 3,000 கன அடி நீர் திறப்பு; சுற்றுலா மையம் மூடல்


திருச்சி முக்கொம்பு கொள்ளிடத்தில் 3,000 கன அடி நீர் திறப்பு; சுற்றுலா மையம் மூடல்
x
தினத்தந்தி 8 Sept 2019 11:48 AM IST (Updated: 8 Sept 2019 12:46 PM IST)
t-max-icont-min-icon

திருச்சி முக்கொம்பு கொள்ளிடத்தில் இருந்து 3,000 கன அடி நீர் திறக்கப்பட்டதால் சுற்றுலா மையம் மூடப்பட்டது.

முக்கொம்பு,

காவிரி ஆற்றில் அதிகப்படியாக 40 ஆயிரம் கன அடி நீர்வரத்து இருந்து வருகிறது. இதனால், திருச்சி முக்கொம்பு கொள்ளிடத்தில் இருந்து 3,000 கன அடி நீர் இன்று திறக்கப்பட்டது.

இதன் காரணமாக, பொதுமக்கள் முக்கொம்பு சுற்றுலா மையத்தில் குளிக்க தடை விதிக்கப்பட்டு மூடப்பட்டது. மேலும், முக்கொம்பு பாலத்திலிருந்து வாத்தலை பகுதிக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

முக்கொம்பு கொள்ளிடத்தில் நீர் திறக்கப்பட்டதால் காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

ஏற்கனவே, முக்கொம்பில் ரூ.387 கோடி செலவில் புதிய கதவணை கட்டும் பணி நடைபெற்று வந்துள்ளது. தற்போது, அந்த பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், புதிதாக கட்டப்படும் கதவணைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story