மாநில செய்திகள்

என்னுயிர் இருக்கும்போதே கோப்பில் மை படட்டும் - பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் டுவிட் + "||" + As soon as I am alive Let the ink in the file Arputham Ammal Tweet

என்னுயிர் இருக்கும்போதே கோப்பில் மை படட்டும் - பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் டுவிட்

என்னுயிர் இருக்கும்போதே கோப்பில் மை படட்டும் - பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் டுவிட்
என்னுயிர் இருக்கும்போதே கோப்பில் மை படட்டும் என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
சென்னை, 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக்காக பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார். இது தொடர்பான வழக்கின்போது தமிழக அரசே 7 பேர் விடுதலை குறித்து முடிவு செய்யலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்து விட்டது.

இதையடுத்து 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி அதை ஆளுநருக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஓராண்டுக்கு மேலாகியும் அந்த கோப்பு மீது ஆளுநர் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தனது டுவிட்டரில், 

"அமைச்சரவை பரிந்துரைத்து 1 ஆண்டு. நிரபராதி, விடுதலை செய்யனும்னு சம்பந்தப்பட்ட பலர் ஒப்புக் கொண்டும் தாமதமேனோ? நிரபராதிக்கு தீர்வு அரசியல் சட்டம் 161 என அறிவீரே! 29 வருட அநீதியில் உங்கள் பங்கு ஒன்றுடன் முடியட்டும்; என்னுயிர் இருக்கும்போதே கோப்பில் மை படட்டும்!" என அதில் பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை