ரெயில்வே தேர்வை தமிழில் எழுத அனுமதி: தி.மு.க.வின் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி - மு.க.ஸ்டாலின்
ரெயில்வே தேர்வை தமிழில் எழுத அனுமதி அளித்திருப்பது, தி.மு.க.வின் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
சென்னை,
மத்திய அரசு நிறுவனமான ரயில்வேயில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நடத்தப்படும் துறை சார்ந்த பொதுப் போட்டித் தேர்வை (General Departmental Competitive Examination), தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்த தேவையில்லை என்றும், ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே நடத்தினால் போதும் என்றும் சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.
இதற்கு தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்த சூழ்நிலையில் ரெயில்வே வாரியம் ரெயில்வே துறை சார்ந்த ஜி.டி.சி.இ. தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் எழுதலாம் என்ற அறிவிப்பை இன்று வெளியிட்டது. இதுகுறித்து ரெயில்வே வாரியம் அனைத்து மண்டல ரெயில்வே மேலாளர்களுக்கும் விளக்க கடிதம் அனுப்பி உள்ளது.
இந்நிலையில் இதுதொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டரில், “ரயில்வேயில் துறைசார்ந்த GDCE தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட அந்தந்த மாநில மொழிகளில் நடத்தலாம் என்று ரயில்வே வாரியம் அறிவித்திருப்பது திராவிட முன்னேற்றக் கழகத்தின் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி!
தமிழ் மொழிக்காக தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியுடன் போராடும்!” என்று பதிவிட்டுள்ளார்.

Related Tags :
Next Story