தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த முக்கிய தலைவன் சென்னையில் கைது


தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த முக்கிய தலைவன் சென்னையில் கைது
x
தினத்தந்தி 10 Sept 2019 3:21 PM IST (Updated: 10 Sept 2019 3:21 PM IST)
t-max-icont-min-icon

தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த முக்கிய தலைவன் சென்னையில் கைது செய்யப்பட்டார்.

சென்னை,

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை தொடர்ந்து, இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வருகிறது. அதே சமயத்தில், இந்தியாவில் நாசவேலைக்கு திட்டமிட்ட சில பயங்கரவாதிகள், தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் பிடிபட்டுள்ளனர்.

மராட்டிய மாநிலம் புனேவில் உள்ள ராணுவ சட்டக்கல்லூரியில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் தென்பிராந்திய ராணுவ தளபதி எஸ்.கே.சைனி கலந்து கொண்டார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர்,

தென்னிந்தியாவிலும், தீபகற்ப இந்தியாவிலும் பயங்கரவாத தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக எங்களுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளன என்றார்.

இந்நிலையில் (ஜமாஅத் அல் முஜாஹிதீன்) தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த முக்கிய தலைவன் சென்னையில் பதுங்கியிருப்பதாக தேசிய புலனாய்வு அமைப்புக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  

இதனையடுத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட தேசிய புலனாய்வு அமைப்பினர் தகவலின் அடிப்படையில் நீலாங்கரையில்  பதுங்கியிருந்த அசதுல்லா ஷேக் என்ற ராஜாவை சென்னை போலீசார் மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்தனர். அவரிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார் பின்னர் ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். 

சென்னையில் கட்டிட தொழிலாளி போர்வையில் அவர் பதுங்கி இருந்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Next Story