ஸ்ரீவில்லிப்புத்தூா் பால்கோவா: புவிசாா் குறியீடு வழங்கியது மத்திய அரசு


ஸ்ரீவில்லிப்புத்தூா் பால்கோவா: புவிசாா் குறியீடு வழங்கியது மத்திய அரசு
x
தினத்தந்தி 10 Sep 2019 3:38 PM GMT (Updated: 10 Sep 2019 3:38 PM GMT)

ஸ்ரீவில்லிப்புத்தூா் பால்கோவாவிற்கு மத்திய அரசு புவிசாா் குறியீடு வழங்கியுள்ளது.

மதுரைக்கு மல்லி, நெல்லைக்கு அல்வா என்று நினைவுக்கு வருவதுபோல்,  ஸ்ரீவில்லிப்புத்தூர் என்றாலே நம் அனைவரின் நினைவுக்கும் வருவது சுவை மிகுந்த பால்கோவா தான்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூரில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் பால்கோவா உலக அளவில்  மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படும் ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா தனித்துவமான சுவையை உடையது. மேலும் இந்த பால்கோவா பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகி வருகிறது.

உலக தரம் வாய்ந்த இந்த பால்கோவாவிற்கு புவிசார் குறியீடு கேட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் தொடர்ந்து விண்ணப்பிக்கப்பட்டது. இதனையேற்று மத்திய அரசின் புவிசாா் குறியீட்டுத் துறை, ஸ்ரீவில்லிப்புத்தூா் பால்கோவாவுக்கு புவிசாா் குறியீடு வழங்கியுள்ளது.

இதன் மூலம் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா என்ற வார்த்தையை  வேறு பகுதிகளை சேர்ந்த யாரும் பயன்படுத்தி அவர்கள் தயாரித்த பால்கோவாவை விற்பனை செய்ய முடியாது. மேலும் சர்வதேச அளவில் இதற்கு தனி அங்கீகாரம்  கிடைக்கும்.

இதே போல், கோவில்பட்டி கடலை மிட்டாய், மணப்பாறை முறுக்கு, தூத்துக்குடி மக்ரூன் உள்பட 18 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற  விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் புவிசார் குறியீடு கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

Next Story