மாநில செய்திகள்

மு.க. ஸ்டாலின் பொறாமையால் விமர்சனம் செய்து வருகிறார்; அமைச்சர் ராஜேந்திர பாலாஜி + "||" + MK Stalin is being criticized for being jealous; Minister Rajendra Balaji

மு.க. ஸ்டாலின் பொறாமையால் விமர்சனம் செய்து வருகிறார்; அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

மு.க. ஸ்டாலின் பொறாமையால் விமர்சனம் செய்து வருகிறார்; அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
மு.க. ஸ்டாலின் பொறாமையால் விமர்சனம் செய்து வருகிறார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
சென்னை,

தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அரசுமுறை பயணமாக இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் நாடுகளுக்கு சென்றார். கடந்த மாதம் 28ந்தேதி தனது பயணத்தை தொடங்கிய முதல் அமைச்சர் தனது 14 நாள் சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு சென்னை திரும்பி உள்ளார்.

வெளிநாடு சுற்றுப்பயணம் முடித்து நாடு திரும்பியிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. ஆட்சியில் பெறப்பட்டுள்ள முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டால், பாராட்டு விழா நடத்த தயார் என்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, மாஸான லீடர் பாஸான லீடர் எப்போதும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான்.  பொறாமையால் மு.க. ஸ்டாலின் விமர்சனம் செய்து வருகிறார் என கூறினார்.

இதேபோன்று, தேவைகள் அதிகமாக இருக்கும் போது பொருளாதார மந்தநிலை வரத்தான் செய்யும் என்று கூறிய அவர், அ.ம.மு.க.வில் இருந்து அனைவரும் வெளியே வந்துவிடுவார்கள் என்றும் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. அ.ம.மு.க.வினர் போட்டியிடும் தொகுதிகளில் டெபாசிட் இழப்பார்கள்; அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
அ.ம.மு.க.வினர் போட்டியிடும் தொகுதிகளில் டெபாசிட் இழப்பார்கள் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.