மாநில செய்திகள்

நெல்லையில் கடத்தப்பட்ட நடராஜர் சிலை ஆஸ்திரேலிய மியூசியத்தில் இருந்து மீட்பு + "||" + A statue of Natarajar abducted in Tirunelveli, rescued from Australian Museum

நெல்லையில் கடத்தப்பட்ட நடராஜர் சிலை ஆஸ்திரேலிய மியூசியத்தில் இருந்து மீட்பு

நெல்லையில் கடத்தப்பட்ட நடராஜர் சிலை ஆஸ்திரேலிய மியூசியத்தில் இருந்து மீட்பு
நெல்லையில் கடத்தப்பட்ட நடராஜர் சிலை ஆஸ்திரேலிய மியூசியத்தில் இருந்து மீட்கப்பட்டு உள்ளது.
நெல்லை,

சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையில் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவை அமைத்து, கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30ந்தேதி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் ஓய்வுபெற இருந்த நிலையில், ஐகோர்ட்டு புதிய உத்தரவை பிறப்பித்தது.  அதாவது சி.பி.ஐ.க்கு வழக்குகளை மாற்றும் தமிழக அரசின் அரசாணையை சட்டவிரோதம் என்று கூறி ரத்து செய்ததோடு, ஓய்வுபெறும் பொன் மாணிக்கவேலை ஒரு வருடத்திற்கு சிறப்பு அதிகாரியாக நியமித்து பணி நீட்டிப்பு வழங்கி உத்தரவிட்டது.  இதனை தொடர்ந்து அவர் சிலை கடத்தல் தொடர்புடைய வழக்குகளை விசாரித்து வருகிறார்.

எனினும், சிலை கடத்தல் வழக்கை கையாளும் பொன்.மாணிக்கவேலுக்கு சரியான ஒத்துழைப்பு வழங்கப்படவில்லை என்று தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஐ. பெரியசாமி அவையில் குற்றச்சாட்டு கூறினார்.

இதற்கு பதில் அளித்து முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறும்பொழுது, பொன்.மாணிக்கவேலுக்கு வாகனங்களும், தேவையான உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன.  204 அதிகாரிகள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.

இதனிடையே, நெல்லை கல்லிடைக்குறிச்சியில் இருந்து கடத்தப்பட்ட நடராஜர் சிலை ஆஸ்திரேலிய மியூசியத்தில் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.  அங்கிருந்து மீட்கப்பட்டு டெல்லி கொண்டு வரப்பட்ட நடராஜர் சிலை நாளை மறுநாள் சென்னை கொண்டு வரப்படுகிறது என பொன்.மாணிக்கவேல் தெரிவித்து உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. தெலுங்கானாவில் முதியோர் இல்லத்தில் சங்கிலி கொண்டு கட்டி வைத்திருந்த 73 பேர் மீட்பு
தெலுங்கானாவில் முதியோர் இல்லத்தில் சங்கிலி கொண்டு கட்டி வைக்கப்பட்டிருந்த 73 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.
2. பர்கூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த புள்ளி மான் செத்தது 2 மான்கள் உயிருடன் மீட்பு
பர்கூர் அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்த புள்ளி மான் செத்தது. 2 மான்கள் உயிருடன் மீட்கப்பட்டன.
3. திருப்பூரில் வாலிபர் கொடூரமாக வெட்டிக்கொலை கைகள் கட்டப்பட்ட நிலையில் பிணம் மீட்பு
திருப்பூரில் காட்டுப்பகுதியில் வாலிபர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். கைகள் கட்டப்பட்ட நிலையில் பிணத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
4. மீன்பிடிக்க சென்ற போது படகு மூழ்கியது: ஆழ்கடலில் தத்தளித்த குமரி மீனவர்கள் உள்பட 17 பேர் மீட்பு
தேங்காப்பட்டணத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற போது படகு மூழ்கியதால், ஆழ்கடலில் தத்தளித்த குமரி மீனவர்கள் உள்பட 17 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
5. கர்நாடக மாநில பகுதியில் புயலில் சிக்கிய குமரி மீனவர்கள் 188 பேர் கப்பல் மூலம் மீட்பு
கர்நாடக மாநில பகுதியில் புயலில் சிக்கி தவித்த குமரி மீனவர்கள் 188 பேர் கப்பல் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களது 22 விசைப்படகுகளும் கடலில் மூழ்கியதாக தெரிகிறது.

அதிகம் வாசிக்கப்பட்டவை