மாநில செய்திகள்

தமிழரான ஈ.பி.எஸ். கடல் கடந்து சாதனை படைத்து உள்ளார்; அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் + "||" + EPS has a record of crossing the ocean; Minister R.B. Uthayakumar

தமிழரான ஈ.பி.எஸ். கடல் கடந்து சாதனை படைத்து உள்ளார்; அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

தமிழரான ஈ.பி.எஸ். கடல் கடந்து சாதனை படைத்து உள்ளார்; அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
தமிழரான ஈ.பி.எஸ். கடல் கடந்து சாதனை படைத்து உள்ளார் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.
சென்னை,

தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அரசுமுறை பயணமாக இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் நாடுகளுக்கு சென்றார். கடந்த மாதம் 28ந்தேதி தனது பயணத்தை தொடங்கிய முதல் அமைச்சர் தனது 14 நாள் சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு சென்னை திரும்பி உள்ளார்.

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், தி.மு.க. ஆட்சியில் 2006 முதல் 2010 மார்ச் வரை மட்டும் 46 ஆயிரத்து 91 கோடி ரூபாய் அந்நிய முதலீடுகள் பெறப்பட்டு 2 லட்சத்து 21 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டன. அ.தி.மு.க. ஆட்சியில் இதுவரை போடப்பட்டுள்ள 443 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்படி எத்தனை கோடி ரூபாய்க்கு முதலீடுகள் பெறப்பட்டுள்ளன.

அந்த முதலீடுகள் மூலம் தொடங்கப்பட்டு, செயல்படும் தொழில் நிறுவனங்கள் எத்தனை? அந்நிறுவனங்கள் மூலம் எத்தனை ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கி தரப்பட்டன என்பதையெல்லாம் குறித்து விரிவான வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா? என்று கேள்வி எழுப்பினார்.

இந்த நிலையில், அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறும்பொழுது, எதற்கெடுத்தாலும் வெள்ளை அறிக்கை கேட்பதையே ஸ்டாலின் வேலையாக வைத்துள்ளார் என்று கூறினார்.  சென்று வென்று வாருங்கள் என்பதற்கே வரலாற்று சாதனையை முதல் அமைச்சர் செய்துள்ளார்.  யதார்த்தம், சத்தியம், உண்மையை கூறி வெளிநாட்டு முதலீடுகளை முதல் அமைச்சர் பழனிசாமி ஈர்த்துள்ளார் என்றும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆலந்தலையில் தூண்டில் வளைவு அமைக்கக்கோரி மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்
ஆலந்தலையில் தூண்டில் வளைவு அமைக்கக்கோரி, மீனவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்து உள்ளனர்.
2. கன்னியாகுமரியில் கடல் சீற்றம் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து
கன்னியாகுமரியில் சூறைக்காற்று வீசியதால் கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால், விவேகானந்தர் மண்டபத்துக்கு படகுபோக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
3. சூறைக்காற்றால் கன்னியாகுமரியில் கடல் சீற்றம் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து
சூறைக்காற்றால் கன்னியாகுமரியில் நேற்று கடல் சீற்றமாக இருந்தது. இதனால் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
4. நாகையில் கடல் சீற்றம்: பைபர் படகு கவிழ்ந்து மீனவர் மாயம் தேடும் பணி தீவிரம்
நாகையில் கடல் சீற்றத்தால் பைபர் படகு கவிழ்ந்து மாயமான மீனவரை தீவிரமாக தேடும் பணி நடைபெற்று வருகிறது.
5. கடல் சீற்றம்: நாகையில், 2-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
கடல் சீற்றத்தால் நாகையில் 2-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.