மாநில செய்திகள்

பரோலை நீட்டிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் நளினி மனு + "||" + Extend parole Chennai High Court Nalini petition

பரோலை நீட்டிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் நளினி மனு

பரோலை நீட்டிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் நளினி மனு
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பரோலில் வெளியே உள்ள நளினி தனது பரோலை நீட்டிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஆண்கள் சிறையிலும்,  அவருடைய மனைவி நளினி பெண்கள் சிறையிலும் 28 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வருகிறார்கள். 

இவர்களுடைய மகளுக்கு திருமண ஏற்பாடு செய்ய 6 மாதம் பரோல் கேட்டு நளினி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஐகோர்ட்டு நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கியது. ஜூலை மாதம் 25-ந் தேதி பரோலில் வெளியே வந்த நளினி சத்துவாச்சாரியில் தங்கி தினமும் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது பரோலில் வெளியே உள்ள நளினி, தனது பரோலை அக்டோபர் 15-ம் தேதி வரை நீட்டிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே ஒருமுறை பரோல் நீட்டிப்பு பெற்ற நிலையில் மேலும் அவகாசம் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார்.