மாநில செய்திகள்

தமிழுக்கு தி.மு.க. தான் பேராபத்து; அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி + "||" + DMK is danger to Tamil; Minister Jayakumar

தமிழுக்கு தி.மு.க. தான் பேராபத்து; அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

தமிழுக்கு தி.மு.க. தான் பேராபத்து; அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
அ.தி.மு.க. ஆட்சியில் தமிழ் வளர்க்கப்படுகிறது என்றும் தமிழுக்கு தி.மு.க. தான் பேராபத்து என்றும் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியில் கூறியுள்ளார்.
சென்னை,

சென்னையில் நடந்த பேராசிரியர் பாலசுப்ரமணியம் எழுதிய திராவிட இயக்கம் வளர்த்த தமிழ் என்னும் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் நேற்று முன்தினம் பேசும்பொழுது, வெள்ளைக்காரர்கள் வரவில்லை எனில், இந்தியா சோமாலியா போன்ற நாடாக மாறியிருக்கும். பிற மொழியை கற்று கொள்வதில் தவறில்லை. ஆனால் தாய்மொழிப்பற்று அவசியம் அதிகம் வேண்டும்.

தி.மு.க.காரர்களின் வீட்டிலேயே தமிழ் பெயர் இல்லாத சூழல் நிலவுகிறது. ஒருவர் வீட்டில் மட்டுமல்ல, பலரின் வீட்டிலும்.

தெரிந்த நண்பரிடத்தில் உங்கள் பேத்தியா என்று கேட்டால் ஆம் என்றார். பெயர் என்ன என்று கேட்டால், அனீஷா என்கின்றனர். இன்னொருவரை கேட்டால் அவ்ஸ்வீத் என்று சொல்கின்றனர். இந்த நிலைதான் இப்போது இருக்கிறது. இது நிச்சயம் மாற வேண்டும்.
 
இந்த நாட்டை, ஒரே மொழி, ஒரே இனம், ஒரே கலாசாரமாக மாற்ற முயற்சிக்கின்றனர். அதை எதிர்க்கும் உணர்வை அனைவரும் பெற வேண்டும் என கூறினார்.

இந்த நிலையில், சிவகாசியில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று கலந்து கொண்டு பேசினார்.  அவர் பேசும்பொழுது, குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும்.  தமிழகத்தில் தமிழ் மொழி மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது என்று கூறினார்.

சென்னை காசிமேடு பகுதியில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் இன்று அளித்த பேட்டியில், மலேசிய நாட்டில் வேலைக்காக சென்று சிக்கியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வெளிநாட்டிற்கு செல்பவர்கள், தமிழக அரசின் ஆலோசனையை பெற்று செல்ல வேண்டும் என்று கூறினார்.  அ.தி.மு.க. ஆட்சியில் தமிழ் வளர்க்கப்படுகிறது என்றும் தமிழுக்கு பேராபத்து தி.மு.க. தான் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. தி.மு.க.வில் கோவை மாநகர் மாவட்டம் இரண்டாக பிரிப்பு: மேற்கு மாவட்ட பொறுப்பாளராக முத்துசாமி நியமனம்
தி.மு.க.வில் கோவை மாநகர் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. கோவை மாநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக முத்துசாமி நியமிக்கப்பட்டுள்ளார். தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
2. குரூப்-4 முறைகேடு : துறை அமைச்சர் ஜெயக்குமாரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் -மு.க.ஸ்டாலின் அறிக்கை
குரூப்-4 முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த உத்தரவிட்டு, துறை அமைச்சர் ஜெயக்குமாரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
3. குரூப்-4 தேர்வை ரத்து செய்யும் வாய்ப்பு இல்லை -அமைச்சர் ஜெயக்குமார்
குரூப்-4 தேர்வை ரத்து செய்யும் வாய்ப்பு இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.
4. திமுக ஆட்சியில் காவல்துறையினர் பட்ட இன்னல்களை மக்கள் மறக்கமாட்டார்கள் - அமைச்சர் ஜெயக்குமார்
திமுக ஆட்சியில் காவல்துறையினர் பட்ட இன்னல்களை மக்கள் மறந்திருக்கமாட்டார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
5. குலுக்கல் முறையில் ஒரத்தநாடு ஒன்றியக்குழு தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது
ஒரத்தநாடு ஒன்றியக்குழு தலைவர் பதவியை குலுக்கல் முறையில் தி.மு.க. கைப்பற்றியது. ஒன்றிய அலுவலகம் முன்பு போலீசார்- தி.மு.க.வினர் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது