மாநில செய்திகள்

பேனர் விபத்திற்கு அதிகாரிகளின் மெத்தன போக்கே காரணம் - சென்னை ஐகோர்ட்டு கண்டனம் + "||" + The banner accident is the culprit of the authorities Madras High Court condemned

பேனர் விபத்திற்கு அதிகாரிகளின் மெத்தன போக்கே காரணம் - சென்னை ஐகோர்ட்டு கண்டனம்

பேனர் விபத்திற்கு அதிகாரிகளின் மெத்தன போக்கே காரணம் - சென்னை ஐகோர்ட்டு கண்டனம்
பேனர் விழுந்து உயிரிழப்புகள் ஏற்பட அதிகாரிகளின் மெத்தன போக்கே காரணம் என சென்னை ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னை,

சென்னையை அடுத்த குரோம்பேட்டை பவானி நகரை சேர்ந்தவர் ரவி. இவருடைய மகள் சுபாஸ்ரீ (வயது 23). இவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்த போது சாலையின் நடுவே இருந்த அ.தி.மு.க. ‘பேனர்’ ஒன்று திடீரென சரிந்து விழுந்ததில் லாரியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து இளம்பெண் சுபாஸ்ரீ உயிரிழப்புக்கு காரணமான பேனரை அச்சடித்த அச்சக நிறுவனத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் உயிரிழப்புக்கு காரணமான பேனரை வைத்த முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது பள்ளிக்கரனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் பேனர் விழுந்து உயிரிழப்புகள் ஏற்பட அதிகாரிகளின் மெத்தனமே காரணம் என சென்னை ஐகோர்ட்டு  கண்டனம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் விதிகளை மீறி பேனர்கள் வைப்பது தொடர்கின்றன என சென்னை ஐகோர்ட்டு குற்றஞ்சாட்டி உள்ளது. 

விதிகளை மீறி பேனர் வைப்பது, அதனால் உயிரிழப்புகள் ஏற்படுவது எல்லாம் அரசியலாக்கப்படுகின்றன. இது போன்ற விபத்துக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு கொடுத்துவிட்டு, உத்தரவை மீண்டும் மதிக்காமல் செல்கின்றனர் என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.