மாநில செய்திகள்

10-ஆம் வகுப்பு மொழிப் பாடங்களுக்கு இனி ஒரே தேர்வு - தமிழக அரசு + "||" + Only one Exams for Languages in S.S.L.C. - Tamil Nadu Govt.

10-ஆம் வகுப்பு மொழிப் பாடங்களுக்கு இனி ஒரே தேர்வு - தமிழக அரசு

10-ஆம் வகுப்பு மொழிப் பாடங்களுக்கு இனி ஒரே தேர்வு - தமிழக அரசு
10-ஆம் வகுப்பு மொழிப் பாடங்களுக்கு இனி ஒரே தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை,

பத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் விருப்பமொழி மற்றும் ஆங்கில மொழிப் ஆகிய இரண்டு மொழிப்பாடங்கள் ஒவ்வொன்றிலும் இரண்டு பகுதிகளை மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த மொழிப் பாடங்களில் உள்ள இரண்டு பகுதிகளுக்கு தாள் 1 மற்றும் தாள் 2 என்ற இரு தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தது.


தற்போது இந்த நடைமுறையை மாற்றியமைத்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் இரண்டு மொழிப்பாடங்களுக்கும் இனி ஒரே தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தற்போதுள்ள நடைமுறை கல்வியாண்டிலிருந்து பொருந்தும் என்றும் அறிவித்துள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை