பாஜக அரசு பல முயற்சிகளை செய்து தமிழகத்தில் இந்தியை திணிக்க பார்க்கிறது : மு.க. ஸ்டாலின்


பாஜக அரசு பல முயற்சிகளை செய்து தமிழகத்தில் இந்தியை திணிக்க பார்க்கிறது : மு.க. ஸ்டாலின்
x
தினத்தந்தி 14 Sep 2019 5:42 AM GMT (Updated: 14 Sep 2019 6:15 AM GMT)

பாஜக அரசு பல முயற்சிகளை செய்து தமிழகத்தில் இந்தியை திணிக்க பார்க்கிறது என்று மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

சென்னை,

இந்தி தினத்தையொட்டி பாஜக தேசிய தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா , “இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும். இந்தியா வெவ்வேறு மொழிகளைக் கொண்ட நாடு, ஒவ்வொரு மொழிக்கும் அதன் சொந்த முக்கியத்துவம் உண்டு. 

ஆனால் உலகின் அடையாளமாக மாறும் பொதுவான மொழியைக் கொண்டிருக்க வேண்டியது அவசியம். இன்று, ஒரு மொழியால் நாட்டை ஒற்றுமையாக வைத்திருக்க முடியும் என்றால், அது பரவலாக பேசப்படும் இந்தி மொழியாகும்” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின்,  அமித்ஷா கருத்து குறித்து கூறியதாவது:- “ எப்பக்கத்தில் இருந்தாவது எப்படியாவது இந்தியை திணித்துவிட முடியாதா என மத்திய அரசு முயற்சிக்கிறது.  மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசு பல முயற்சிகளை செய்து தமிழகத்தில் இந்தியை நுழைக்க பார்க்கிறது” என்று தெரிவித்துள்ளார். 

Next Story