மாநில செய்திகள்

பேனர் சரிந்து விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த அதே பகுதியில் மீண்டும் விபத்து + "||" + Falling banner The young girl died in same area again Accident

பேனர் சரிந்து விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த அதே பகுதியில் மீண்டும் விபத்து

பேனர் சரிந்து விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த அதே பகுதியில் மீண்டும் விபத்து
சென்னையில் பேனர் சரிந்து விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த அதே பகுதியில் பேனரை அகற்றும் போது ஊழியர் ஒருவர் படுகாயமடைந்தார்.
சென்னை,

சென்னை பள்ளிக்கரணையில் பேனர் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் இளம்பெண் சுபஸ்ரீ  பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அனைவரின் மத்தியில்  பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, சாலையோரங்களில் உள்ள பேனர்கள் அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், பள்ளிக்கரணை ரேடியல் சாலையில் சுபஸ்ரீ உயிரிழந்த பகுதியில் இருந்து 50 அடி தூரம் தள்ளி தனியார் விளம்பர போர்டு இருந்தது. 

60 அடி உயரம் உள்ள பேனரை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். பேனரை அகற்றும் போது ராஜேஷ் என்பவர்  படுகாயமடைந்தார். இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.