ஆங்கிலம், இந்தியில் வங்கி பணியிட தேர்வு: மாநில மொழிகளுக்கு இழைக்கப்படும் அநீதி - கனிமொழி எம்.பி.,


ஆங்கிலம், இந்தியில் வங்கி பணியிட தேர்வு: மாநில மொழிகளுக்கு இழைக்கப்படும் அநீதி - கனிமொழி எம்.பி.,
x
தினத்தந்தி 15 Sep 2019 5:58 AM GMT (Updated: 15 Sep 2019 5:58 AM GMT)

தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் வங்கி பணியிட தேர்வு ஆங்கிலம், இந்தியில் மட்டும் நடைபெறும் என்பது மாநில மொழிகளுக்கு இழைக்கப்படும் அநீதி என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

சென்னை,

பொதுத்துறை வங்கி பணிகளுக்கான தேர்வை வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (ஐபிபிஎஸ்) நடத்துகிறது. இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு பொதுவாக ஆங்கிலம் அல்லது இந்தி மொழிகளில் மட்டுமே கேள்விகள் கேட்கப்படுகின்றன.

சமீபத்தில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் உறுதி செய்யும் வகையில், கிராமப்புற வங்கி வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு, ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி தவிர 13 பிராந்திய மொழிகளில் கேள்வித் தாள்கள் வழங்கப்படும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மக்களவையில் தெரிவித்தார்.

இந்தநிலையில் வங்கி பணியிட தேர்வு ஆங்கிலம், இந்தியில் மட்டும் நடைபெறும் என்பது மாநில மொழிகளுக்கு இழைக்கப்படும் அநீதி என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் வங்கி பணியிட தேர்வு ஆங்கிலம், இந்தியில் மட்டும் நடைபெறும் என்பது மாநில மொழிகளுக்கு இழைக்கப்படும் அநீதி. இதை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சரி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

Next Story