பேனர் வைப்பது மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்துகிறது : திமுக தலைவர் மு.க ஸ்டாலின்


பேனர் வைப்பது மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்துகிறது : திமுக தலைவர் மு.க ஸ்டாலின்
x
தினத்தந்தி 15 Sep 2019 1:58 PM GMT (Updated: 15 Sep 2019 2:16 PM GMT)

பேனர் வைப்பது மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்துகிறது என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.

திருவண்ணாமலை, 

திருவண்ணாமலையில் நடைபெற்ற திமுகவின் முப்பெரும் விழாவில் திமுக தலைவரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- “  கருணாநிதியின் பிறந்த நாள் செம்மொழி நாள் விழாவாக கொண்டாடப்படும். 

திமுக முப்பெரும் விழாவில் பேனர் வைக்காததற்கு நன்றி.  இனிமேலும் யாரும் பேனர் வைக்கக்கூடாது.  பேனர் வைப்பது மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்துகிறது. எந்த விழாவிலும் பேனர் வைக்கக் கூடாது. திராவிட இயக்க படைப்பாளிகளுக்கு 2020- ஜூன் 3 ஆம் தேதி கலை இலக்கிய விருதுகள் வழங்கப்படும். 

தமிழகத்தில் முதலீடு செய்ய உள்ள வெளிநாட்டு நிறுவனங்களின் பெயர்களை முதலமைச்சர் அறிவிக்க வேண்டும்.  திமுகவின் சாதனைகளை யாராலும் முறியடிக்க முடியாது.  டைடல் பார்க் ஒன்றே  திமுகவின் சாதனைக்கு  போதுமானது. கருணாநிதியை பார்த்துதான் பொறாமைப்படுவோம், வேறு யாரையும் பார்த்து பொறாமைப்பட வேண்டிய அவசியம் இல்லை" இவ்வாறு அவர் பேசினார்.

Next Story