மாநில செய்திகள்

சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில்கன்டெய்னர் லாரிகள் வேலை நிறுத்தம்ஏற்றுமதி-இறக்குமதி பாதிப்பு + "||" + In the ports of Chennai, Ennur and Katupalli Container trucks strike

சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில்கன்டெய்னர் லாரிகள் வேலை நிறுத்தம்ஏற்றுமதி-இறக்குமதி பாதிப்பு

சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில்கன்டெய்னர் லாரிகள் வேலை நிறுத்தம்ஏற்றுமதி-இறக்குமதி பாதிப்பு
சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் ஏற்றுமதி-இறக்குமதி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருவொற்றியூர்,

மோட்டார் வாகனச்சட்டம் 1988 விதிகளின்படி ஒவ்வொரு லாரிக்கும் குறிப்பிட்ட எடைகொண்ட பாரத்தை மட்டுமே ஏற்றிச்செல்ல வேண்டும் என்பது விதியாகும். இதனை மீறும் வாகன உரிமையாளர்கள் மீது ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து லாரியில் அதிக எடைகொண்ட கன்டெய்னர் பெட்டிகளை ஏற்ற மாட்டோம். ஒரு லாரியில் ஒரு கன்டெய்னர் பெட்டியை மட்டுமே ஏற்றுவோம். அதற்கு வாடகை நிர்ணயம் செய்யவேண்டும். இல்லை என்றால் 16-ந்தேதி முதல் லாரிகளை ஓட்டமாட்டோம் என்று தமிழ்நாடு கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுக நிர்வாகத்திடமும், சரக்கு கையாளும் சரக்கு பெட்டக நிறுவனத்திடமும் கோரிக்கை அளித்தனர்.

வேலை நிறுத்த போராட்டம்

ஆனால் அந்த கோரிக்கை மீது அவர்கள் இதுவரையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதையடுத்து 21 சங்கங்களை சேர்ந்த கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

இது குறித்து கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் ந.மனோகரன், எஸ்.ஆர்.ராஜா, எம்.எம்.கோபி ஆகியோர் கூறியதாவது:-

கன்டெய்னர் லாரிகளில் அதிகபாரம் ஏற்றினால் ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. எனவே மோட்டார் வாகனச்சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு ஒரு லாரியில் 20 அடி கன்டெய்னர் ஒன்று மட்டும் ஏற்றிச்செல்வோம். 16-ந்தேதிக்குள் அதற்குரிய வாடகையை நிர்ணயம் செய்யவேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தோம். ஆனால் அவர்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் நாங்கள் லாரிகளை இயக்கவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஆர்ப்பாட்டம்

இதையடுத்து கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் சென்னை துறைமுக நுழைவு வாயிலில் நின்று கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக சென்னை, எண்ணூர் துறைமுகங்களில் 10 ஆயிரம் கன்டெய்னர் லாரிகள் ஓடவில்லை.

இதனால் திருவொற்றியூர், காசிமேடு, எண்ணூர் விரைவு சாலை, மணலி விரைவுச்சாலைகளில் லாரிகள் நீண்டவரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக ஏற்றுமதி, இறக்குமதி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னை திருவேற்காடு அருகே வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது பொதுமக்கள் சாலை மறியல்
திருவேற்காடு அருகே வீடுகளுக்குள் மழைநீருடன் கழிவுநீரும் புகுந்ததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
2. சென்னையில் வழக்கம் போல் பள்ளிகள் இன்று செயல்படும் : ஆட்சியர் அறிவிப்பு
சென்னையில் வழக்கம் போல் பள்ளிகள் இன்று இயங்கும் என்று மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி அறிவித்துள்ளார்.
3. வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் சென்னையை குளிர்வித்த சாரல் மழை
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று சாரல் மழை பெய்தது. இன்றும் (வியாழக்கிழமை) மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4. சென்னை ஏ.டி.எம்.மில் பணம் திருடிய வடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது நூதன முறையில் பல லட்சம் ரூபாய் திருடியது தெரியவந்தது
அமைந்தகரையில் உள்ள ஏ.டி.எம். ஒன்றில் நூதன முறையில் பணம் திருடிய வடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். கும்பலாக சேர்ந்து கொண்டு பல லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது.
5. ராதாபுரம் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிக்க கூடாது- உச்ச நீதிமன்றம்
ராதாபுரம் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.