தங்கம் விலை ஒரு வாரத்துக்கு பிறகு மீண்டும் உயர்வு பவுனுக்கு ரூ.288 அதிகரித்து, ரூ.28,960-க்கு விற்பனை


தங்கம் விலை ஒரு வாரத்துக்கு பிறகு மீண்டும் உயர்வு பவுனுக்கு ரூ.288 அதிகரித்து, ரூ.28,960-க்கு விற்பனை
x
தினத்தந்தி 16 Sep 2019 10:45 PM GMT (Updated: 16 Sep 2019 9:59 PM GMT)

தங்கம் விலை கடந்த ஒரு வாரத்துக்கு பிறகு மீண்டும் உயர்ந்து இருக்கிறது. நேற்று பவுனுக்கு ரூ.288 அதிகரித்து, ரூ.28 ஆயிரத்து 960-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சென்னை,

தங்கம் விலை கடந்த மாதத்தில் (ஆகஸ்டு) எகிற தொடங்கியது. ஒவ்வொரு நாளும் ராக்கெட் வேகத்தில் விலை அதிகரித்து கொண்டே சென்றது. கடந்த மாதம் கடைசியில் ஒரு பவுன் ரூ.30 ஆயிரம் வரை நெருங்கி சென்றது.

இந்த மாத தொடக்கத்தில் இருந்தும் அதன் விலை உயர்ந்த வண்ணமே இருந்தது. வெகு நாட்களுக்கு பிறகு கடந்த 9-ந் தேதி குறைந்தது. அதன்பிறகு தங்கத்தின் விலை தொடர்ந்து இறங்கு முகமாக இருந்தது.

இந்த நிலையில் ஒரு வாரத்துக்கு பிறகு அதன் விலை நேற்று மீண்டும் உயர்ந்து காணப்பட்டது.

மீண்டும் உயர்வு

நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 584-க்கும், ஒரு பவுன் ரூ.28 ஆயிரத்து 672-க்கும் விற்பனை ஆனது. நேற்று மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.36-ம், பவுனுக்கு ரூ.288-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 620-க்கும், ஒரு பவுன் ரூ.28 ஆயிரத்து 960-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தங்கத்தின் விலையை போலவே வெள்ளி விலையும் கடந்த 5 நாட்களுக்கு பிறகு மீண்டும் அதிகரித்து இருக்கிறது. நேற்று கிராமுக்கு 1 ரூபாய் 60 காசும், ஒரு கிலோ ரூ.1,600-ம் அதிகரித்து ஒரு கிராம் 50 ரூபாய் 30 காசுக்கும், ஒரு கிலோ ரூ.50 ஆயிரத்து 300-க்கும் விற்பனை ஆனது.

Next Story