மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் + "||" + Police throughout Tamil Nadu Alert

தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்

தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்
தமிழகம் முழுவதும் போலீசார் உஷாராக இருக்கும்படியும், முக்கிய இடங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கும்படியும் அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,

அரியானா போலீசாரின் எச்சரிக்கையை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷாராக இருக்கும்படியும், முக்கிய இடங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கும்படியும் அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

அதேபோல சென்னை சென்டிரல் உள்பட அனைத்து முக்கிய ரெயில் நிலையங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்த ரெயில்வே டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். அதன்படி தமிழகம் முழுவதும் கோவில்கள், ரெயில் நிலையங்கள் உள்பட முக்கிய இடங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை சென்டிரல் உள்பட அனைத்து ரெயில் நிலையங்களிலும் ரெயில்வே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். பயணிகளின் உடைமைகள் தீவிரமாக சோதனை செய்யப்படுகிறது.